இவ்வருடம் (2016) எமது சங்கத்தினால் வழங்கப்பட்ட முதற்கட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்ட எம் கிராமத்து மக்களின் விபரங்கள் 2016

எமது உதவித்திட்டத்தில் இவ்வருடம் 2015

எமது ஒன்றியத்தின்  வருடத்திற்கான‌ (2014) மூன்றாம் கட்ட கொடுப்பனவில் ஆறு குடும்பங்கள் தலா ரூபா 25000.00 பெறுமதியான கடைப்பொருட்கள், விறகு வியாபாரத்திற்கு தேவையான விறகுகள், சைக்கிளுடன் பலகார வியாபாரத்திற்கு தேவையான பொருட்கள், கோழிகளுடன் கூடிய கோழிக்கூடு ஆகியன வழங்கப்பட்டன. அத்துடன் மூன்று முன்பள்ளி ஆசிரியைகளுக்கு தலா ரூபா 5000.00-ம் றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு ரூபா 40,000.00-ம் கலைமகள் பாடசாலைக்கு ரூபா 30,000.00-ம் வழங்கப்பட்டன.

 

 

எமது ஒன்றியத்தின் இந்த வருடத்திற்கான‌ (2014) இரண்டாம் கட்ட கொடுப்பனவில் பெற்றோரை இழந்த மற்றும் வசதியற்ற குடும்பங்களை சேர்ந்த பத்து மாணவர்கள் புதிய துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொண்டனர்.

அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் மற்றும் ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.

எமது உதவித்திட்டத்தில் இவ்வருடம் (ஏப்ரல் 2014) ஏழு குடும்பங்கள் தையல் மெசின்களை பெற்றுக்கொண்டனர்.  சிறு கடை ஒன்றை நடத்திவரும் கால் ஊனமுற்ற ஒருவருக்கு அவரின் வேண்டுகோளின்படி கடைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி கொடுத்துள்ளோம்.

இடையறாது இவ்வுதவிகளை செய்வதற்கு சலிப்பின்றி உதவிடும் கரங்களுக்கு சங்கம் கரம்கூப்பி நன்றிகளை தெரிவிக்கிறது.

உலகிலே மிகப்பெரிய விடயம் தானமே என்று மகாபாரதம் கூறுகிறது.

 

 

 

njhopy; Kaw;rpj;jpl;lj;jpd; fPo; xd;wpaj;jpdhy; toq;fg;gl;l cjtpfisg; ngw;Wf;nfhz;l vk; cwTfs; (itfhrp 2013)