இவ்வருட நிகழ்வுகள்........
பங்குனி, 2012
வல்வெட்டித்துறை சிவன் கோவில் முதலாம் திருவிழாவின் உபயகாரராக அன்றுதொட்டு மயிலிட்டி மக்கள் விளங்குவதோடு எம் மக்களால் இத்திருவிழா சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றது. நன்கொடை வழங்க விரும்புவோர் தயவு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும். 2012-ம் ஆண்டு திருவிழாவிற்கு அவற்றை அனுப்பி வைப்போம்.


சித்திரை14, 2011
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மயிலிட்டி அம்மன் மற்றும் முருகன் ஆலயங்களில் சிறப்புத்திருவிழாக்கள் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு வேண்டிய நிதியை நாம் தற்போது சேகரித்து அனுப்பிக்கொண்டிருக்கிறோம். நிதி வழங்க விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
சித்திரை 24, 2011
இலண்டன் வாழ் மயிலிட்டி மக்களின் நாலாவது வருடாந்த ஒன்றுகூடல் ST Matthias Hall, Rushgrove Avenue, Colindale, NW9 6QY-ல் மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணிவரை நடைபெறும். மயிலிட்டி மக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஒருங்கமைப்பாளர்கள் அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
ஆனி 13, 2011
நோர்வே வாழ் மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் ஒன்றுகூடல் ஆனி் 13, 2011 மதியம் ஒரு மணியளவில் GREFSEN SCHOOL-ல் நடைபெற உள்ளது. மயிலிட்டி மக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கிறார்கள்.
ஆனி 26, 2011
ஒன்றியத்தின் ஏழாவது கோடைகால ஒன்றுகூடல் மோர்ணிங் சைட் பூங்காவில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமையை தெரிவு செய்துள்ளோம். மயிலிட்டி மக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
ஆவணி, 2011
மொன்றியல் முருகன் ஆலயத்தின் தீர்த்தத் திருவிழா தொடர்ந்து மயிலிட்டி மக்களால் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றது. நன்கொடை வழங்கவிரும்புவோர் தயவுசெய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
மார்கழி 26, 2011
ஒன்றியத்தின் ஏழாவது குளிர்கால ஒன்றுகூடல் சிறப்புடன் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.